பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ேநற்று பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில் பொதுமக்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கும் உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் உள்ளிட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.