பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம்
பொதுவினியோக திட்ட குறைதீர் கூட்டம் நடந்தது.;
கரூர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கரூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். இதில், பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்ட பல்வேறு மனுக்களை வழங்கினர். இதில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.