பொது வினியோகத்திட்ட குறைதீர் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது

Update: 2022-11-11 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(சனிக்கிழமை) ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் குடிமைப்பொருள் தனி தாசில்தார், வட்ட வழங்கல் அலுவலர்களால் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், செல்போன் எண் பதிவு, மாற்றம் செய்தல், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அங்கீகாரச்சான்று உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள், பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் உள்ளிட்டபுகார்களையும் கொடுக்கலாம். இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி பொது வினியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளலாம். இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்