பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்

பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.

Update: 2023-07-09 18:23 GMT

புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்ட வழங்கல் அலுவலர் பானுமதி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கைபேசி எண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர். அதேபோல் பொது வினியோக கடைகளின் செயல்பாட்டு குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்தனர். முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்