ஒரத்தூர் ஊராட்சியில் பொது வினியோக குறைதீர் கூட்டம்
ஒரத்தூர் ஊராட்சியில் பொது வினியோக குறைதீர் கூட்டம் நடைபெற்றது.;
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஒரத்தூர் ஊராட்சியில் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது வினியோக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஒ.கே.எஸ். வள்ளி சுந்தர் தலைமை தாங்கினார்.
வட்ட வழங்கல் அலுவலர் தீபன்ராஜ், ஒரத்தூர் ஊராட்சி தி.மு.க. கிளை கழக செயலாளர் ஒ.கே. சுந்தர், ஒரத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பூங்கோதை பழனி, தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய, நகல் குடும்ப அட்டை, கைபேசி பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட 55 கோரிக்கை மனுக்களை அதிகாரியிடம் அளித்தனர். புதிய ரேஷன்கார்டு கோரி விண்ணப்பித்த 7 மனுக்கள் மீது உரிய விசாரணை செய்து தகுதியானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது விநியோக திட்ட குறைதீர் கூட்டத்தை காஞ்சீபுரம் மாவட்ட வழங்கல் அலுவலர் பாபு நேரில் சென்று பார்வையிட்டார். குறைதீர் கூட்டத்தில் தனி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.