மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்க சென்ற மின்வாரிய அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-08-29 18:58 GMT

சிதம்பரம், 

சிதம்பரம் லால்கான் தெருவில் உள்ள இடத்தில் ஏழு குடும்பத்தினர் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வீடுகளின் மின் இணைப்பை துண்டித்து, அவர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று வக்பு வாரியத்தினர் மின்வாரியத்துக்கும், சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்திலும் புகார் செய்ததாக தெரிகிறது.

அதன் பேரில் சிதம்பரம் மின்வாரியத்துறை அதிகாரிகள் நேற்று லால்கான் தெருவில் உள்ள ஏழு வீடுகளின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள், கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவனுடன் சேர்ந்து மின்இணைப்பை துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், நாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு எங்களிடம் பட்டா உள்ளது. இந்த ஏழு வீடுகளும் எங்களுக்கு சொந்தமானது என்றனர். இதுபற்றி அறிந்து வந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள், மின் இணைப்பை துண்டிக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்