கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-10-31 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்ணா போராட்டம்

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தவர்களின் உடமைகளை போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து ஊட்டி அருகே கேத்தி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் தங்களது வீடு அருகே ஒருவர் வீடு கட்டுவதாகவும், மேலும் சூரியஒளி படாமல் இருக்க சில மாற்றங்கள் செய்து தொந்தரவு செய்வதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

110 மனுக்கள்

இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டரிடம் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை தெரிவித்தனர். இதுதொடர்பாக கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களிடம் இருந்து 110 மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், சுய தொழில் தொடங்க 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத்திட்டத்தின் கீழ் தேவபெட்டா அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் சத்துணவு அமைப்பாளாராக பணியாற்றிய வசந்தாமணி உடல்நலக்குறைவால் இறந்ததை தொடர்ந்து, அவரது வாரிசான ரம்யாவுக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பளாராக பணி நியமன ஆணை, ரத்ததானம் முகாம்கள் சிறப்பாக நடத்தி கொடுத்த 16 தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் அம்ரித் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்