முத்துவாஞ்சேரியில் இருந்து அரியலூருக்கு காலை நேரங்களில் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

முத்துவாஞ்சேரியில் இருந்து அரியலூருக்கு காலை நேரங்களில் அரசு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-18 18:47 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், முத்துவாஞ்சேரியில் இருந்து விக்கிரமங்கலம் வரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரியலூருக்கு தினமும் காலையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்வோர் என பலதரப்பட்ட மக்களும் செல்கின்றனர். ஆனால் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரத்திற்கு அரியலூர் செல்வதற்கு பஸ்கள் இல்லை. இதனால் பல நாட்களாக இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த இடைவெளியில் காலை 8 மணி அளவில் ஒரு அரசு பஸ் இயக்கிட வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்