கொரோனா பரவலைக் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் - அமைச்சர் சு.முத்துசாமி

கொரோனா பரவலைக் குறைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-29 07:50 GMT

கடத்தூர்,

கோபி அருகே உள்ள மணியகாரன் புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதியகட்டிடம், சிறுவலூரில்திருமண மண்டபம், கொளப்பலூரில் கலைஞர் பூங்கா, கோபி நகராட்சியில் கலைஞர் மேம்பாட்டு திட்ட பூங்கா திறப்பு விழா ஆகியவை நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு அவற்றைத் திறந்து வைத்தார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி கூறியதாவது.

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது. பட்டா வழங்குதல், கட்டிய வீடுகளை பயனாளிகளுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது. கூடுதலாக எத்தனை நபர்களுக்கு வீடுகள் தேவை என்பது குறித்து கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் கொரானா தொற்றின் எண்ணிக்கை குறைந்த அளவே உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு முககவசம் கட்டாயம் என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்றை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவை. தடுப்பூசி முகாம்களில் தனி கவனம் செலுத்தி பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி அவசியம் என்ற நோக்கில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்