பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம்
பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் வருகிற 16-ந்தேதி காலை 11 மணியளவில் கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், பவித்திரம் கிராமம், பாலமலை அருகில் அமைந்துள்ள பரணி மஹாலில் கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், புன்னம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள தனியார் சாதாரண கல் குவாரி நிறுவனத்தின் சுரங்கத் திட்டம் குறித்து பொதுமக்கள் கருத்து கேட்புணர்வு கூட்டமானது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற உள்ளது.
எனவே இதுகுறித்து கருத்து தெரிவிக்க விருப்பமுள்ள பொதுமக்கள் கருத்து கேட்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.