ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சின்னமனூர் நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சின்னமனூர் நகராட்சி அலுவலகத்துக்கு நேற்று 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்போது அவர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.
சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட சில வார்டுகளில் அனைவருக்கும் குடிநீர் வழங்கும் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மெத்தனப்போக்கில் செயல்படுத்தி வருகிறது. அதாவது குழாய் பதிக்கும் பணிக்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படவில்லை. சில இடங்களில் பள்ளங்கள் அப்படியே கிடக்கின்றன. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றன. சாலையோர பள்ளங்களால் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஜல்ஜீவன் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், சின்னமனூரில் உள்ள பி.டி.ஆர். கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு சாக்கடை கால்வாய்களை சரிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சின்னமனூர் போலீசார் மற்றும் நகராட்சி ஆணையாளர் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அப்போது கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.