நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை

விக்கிரமசிங்கபுரம் அருகே நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-05-26 19:15 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சிவந்திபுரம் பகுதியில் அருண் தாமஸ் (வயது 37) என்பவர் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு அம்பை சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியை சேர்ந்த துர்கா தேவி (37) என்பவர் தனக்கு சொந்தமான 205 கிராம் நகையை அடகு வைத்தார். அதற்கான அசலையும், வட்டியையும் கொடுத்த போது நகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துர்கா தேவி விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்தாமஸ், அவரது தம்பி அருண் பிரபாகரன், ஜெயந்தி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் இதேபோல் பாதிக்கப்பட்டுள்ளதாக 15 பேர் அந்த நிதி நிறுவனத்தை திடீரென முற்றுகையிட்டனர். தொடர்ந்து எங்களது நகைகளை மீட்டு தர வேண்டும் என விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்