டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகை

பழைய ஜெயங்கொண்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் முற்றுகையில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-22 19:07 GMT

டாஸ்மாக்கடை முற்றுகை

லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்டத்தில் டாஸ்மாக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த டாஸ்மாக்கடையை மூட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதில் பழைய ஜெயங்கொண்டம் டாஸ்மாக் கடை இடம் பெறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள், கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளோடு சேர்ந்து டாஸ்மாக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தி அந்த கடையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வெங்கடேசன், தாசில்தார் மோகன்ராஜ், டாஸ்மாக் அலுவலர்கள் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தற்போது இங்கு செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை இனி விற்பனைக்காக திறக்கப்படாது என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்