தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

கோவிந்தமங்கலத்தில் குறைந்த மின்அழுத்த பிரச்சினை காரணமாக தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-09-05 19:22 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா கோவிந்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவிந்தமங்கலம், மூலவயல், நரிக்கான்வயல், மேலக்கரை, கீழ்மருதங்குளம், கரியான்கோட்டை உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் டிவி, மிக்சி கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் மங்கையர்க்கரசி மகாகிருஷ்ணன் தலைமையில் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.தகவல் அறிந்த ஆர்.எஸ். மங்கலம் தாசில்தார் தென்னரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதற்கு மின்வாரியத்துறை அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மின்குறைகளை சரி செய்து தருவதாக உறுதி அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்