குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

குன்னூர் நகராட்சி சார்பில் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2022-09-26 18:45 GMT

குன்னூர், 

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம் பிரிக்காமல் வழங்கி வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை தரம் பிரிக்க மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் குன்னூர் நகராட்சி சார்பில், என் குப்பை என் பொறுப்பு என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பழைய ஆஸ்பத்திரி குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது. நகராட்சி சுகாதார அதிகாரிகள் மால்முருகன், சித்தநாதன் ஆகியோர் குப்பைகளை தரம் பிரிப்பது குறித்து விளக்கம் அளித்தனர். பொதுமக்களை நேரில் சந்தித்து குப்பைகளை எவ்வாறு தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று செயல்விளக்கம் அளித்தனர். மக்கும் குப்பை, மக்காத குப்பை, உணவுக்கழிவு, இறைச்சிக்கழிவு என தனித்தனியாக வழங்க வேண்டும். இதனை சரியாக பின்பற்றும் நபர்களுக்கு மாதந்தோறும் சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்