திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நெமிலியில் திருட்டை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-06-01 17:58 GMT

நெமிலியில்திருட்டை தடுப்பது குறித்து பஸ் நிலையத்தில் போலீசார் துண்டு பிரசுரம் வினியோகம் செய்தனர். அப்போது பொதுமக்களிடம் போலீசார் கூறியதாவது:-

வெளியூர்களுக்கு செல்லும்போது உறவினர்களிடமோ அல்லது போலீஸ் நிலையத்திலோ தகவல் தெரிவிக்கலாம். இரவு நேரங்களில் பயணம் செல்லும் போது நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதை தவிர்க்கவேண்டும். பஸ்களில் பயணம் செய்யும்போது யாரிடமும் குடிநீர், பிஸ்கட் வாங்கி சாப்பிடக்கூடாது என்பது உள்ளிட்டவை குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்