மாவட்ட கவுன்சிலரின் கணவருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

மாவட்ட கவுன்சிலரின் கணவருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-15 18:16 GMT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் கூத்தம்பாக்கம் ஊராட்சி கங்கை அம்மன் கோவில் திடலில் கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பிரபாவதி மற்றும் கவுன்சிலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாததால் தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தீர்மானங்களை நிறைவேற்றாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகன் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்‌. அவரிடம் 100 நாள் அட்டை பெறுவதற்கு தலா 100 ரூபாய் வசூல் செய்வதாகவும், 10 நாட்களாக எங்கள் பகுதிக்கு உப்பு கலந்த குடிநீரே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது எனவும், வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை மீண்டும் அதே இடத்துக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினரின் கணவர் முருகன் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கூட்டத்தில் இந்த ஒருவர் அடிப்படை வசதிகளை செய்வதற்கு நீங்கள் முன் வரவில்லை. எனவே கூட்டத்தை விட்டு வெளியேறுங்கள் என்று கூறினார் இதனால் ஆத்திரம் அடைந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகன் கூட்டத்தை விட்டு வெளியே சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்குவதைப் போல் பேசினார். உடனடியாக கூட்டத்தில் இருந்தவர்கள் அந்த நபரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்தி முருகன் அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இதனால் அங்கு அரை மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்