பள்ளிக்கூடத்திற்கு டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டு வழங்கல்

பள்ளிக்கூடத்திற்கு டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்பட்டது.

Update: 2023-08-26 19:00 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள தெற்கு கழுகுமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட துலுக்கர்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டு வழங்குதல் மற்றும் காலை உணவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் பேச்சியம்மாள் தலைமை தாங்கினார். தெற்கு கழுகுமலை பஞ்சாயத்து தலைவர் நாகஜோதி, துணை தலைவர் நபிஷால்பானு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியாகுருராஜ் கலந்து கொண்டு, டிஜிட்டல் ஸ்மார்ட் போர்டு மற்றும் காலை உணவை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆசிரியர் புவனேஸ்வரி, ஊராட்சி செயலர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்