மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Update: 2023-01-05 19:25 GMT

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் சார்பில் பிறப்பு முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமை தாங்கினார். கலெக்டர் ரமணசரஸ்வதி, சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் சிவசங்கர் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பிலான 79 வகையான உதவி உபகரணங்களை வழங்கினார். இதில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்