வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் முகாம்

வேதாரண்யத்தில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.

Update: 2023-03-26 18:45 GMT

வேதாரண்யம்:

திருச்சி மண்டல வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் குறைதீர்க்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் அந்தந்த மாவட்டங்கள் மற்றும் வட்டார அளவில் நடைபெற்று வருகிறது.அதன்படி நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்க்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு முகாம் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 மணி முதல் மாலை 5.45 வரை வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.இதில் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கலந்து கொண்டு, தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்