தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும்

தையல் கலைஞர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும் என சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-05-30 17:46 GMT

பெரம்பலூர் 

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு தையல் கலைஞர்கள் சங்கத்தின் அமைப்பு கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று காலை நடந்தது. இதற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தையல் கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஐடா ஹெலன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். கடைகளில் பணிபுரியும் தையல் கலைஞர்களுக்கு தமிழக அரசு இலவச மின்சாரம் வழங்கிட வேண்டும். வீடு சார்ந்த தையல் கலைஞர்களுக்கு இலவச தையல் எந்திரம் வழங்கிட வேண்டும். ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அதனை தொடர்ந்து மாலையில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் அகில இந்திய நிர்வாகக்குழு முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்