செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து பெருமிதம் கொள்கிறோம்: முதல் அமைச்சர் வாழ்த்து
கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற செஸ் வீராங்கனை வைஷாலிக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரியான வைஷாலி, இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்றுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
இந்த நிலையில், வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
"தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டராக பட்டம் சூடிய வைஷாலிக்கு வாழ்த்துகள். செஸ் வீராங்கனை வைஷாலியின் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். வைஷாலியின் வெற்றிப்பயணம், செஸ் ஆர்வலர்களுக்கு உத்வேகம் அளிக்கும். கிராண்ட்மாஸ்டர் உடன்பிறப்புகளாக நீங்களும் உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவும் வரலாறு படைத்துள்ளீர்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.