விசைப்படகு மீனவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விசைப்படகு மீனவர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-12-02 17:06 GMT

சாயல்குடி, 

சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளான நரிப்பையூர் மூக்கையூர் வாலிநோக்கம் ரோஸ் மாநகர் உள்ளிட்ட கடற்கரை ஓர பகுதிகளில் 17-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு 20,000-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு விசைப்படகு ஆழ்கடல் படகு மூலமாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வந்த விசைப்படகு மீனவர்கள் நரிப்பையூர் ஊராட்சி வேப்பமரத்துப்பனை கிராமத்தில் கடற்கரை ஓரம் மீனவர்களின் நாட்டுப் படகுகளை மோதி சேதப்படுத்தி மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி சென்றுள்ளதை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடற்கரையோரம் வேப்பமரத்து பனை பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர் சங்க தலைவர் முருகேசபாண்டியன் தலைமை யிலும் துணைத் தலைவர் குருசேகர், செயலாளர் இமானு வேல், பொருளாளர் யோசேப்பு, துணைச் செயலாளர் சுவின் செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டுப்படகுகள் மீன்பிடிக்கும் பகுதிகளில் விசை படகுகளை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்த மீன்வளத்துறை ஆய்வாளர் முனியசாமி, சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன், வாலிநோக்கம் கடலோர காவல் படை சப்-இன்ஸ் பெக்டர் பொறுப்பு பாலகிருஷ்ணன் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். வருகிற திங்கட்கிழமை நாட்டுப்படகு விசைப்படகு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுத்த பின்பு தான் விசைப்படகு கடலில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்ட பின்பு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்