பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி,
பரமக்குடி நகராட்சியில் டெங்கு தடுப்பு, கொரோனா கால பணிகளை 8 ஆண்டுகள் பணி செய்த தற்காலிக பணியாளர் களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் கவுரவ தலைவர் ராஜா தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சந்தானம், உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் அய்யாதுரை, மாவட்ட தலைவர் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். ஆர்ப்பாட்டத்தின்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் சித்ரா, மரியா, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.