அனுமதியின்றி போராட்டம்; பா.ஜ.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு
அனுமதியின்றி போராட்டம்; பா.ஜ.க.வினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலங்குடி:
இந்து மக்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து ஆலங்குடி அருகே இச்சடி பகுதியில் பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக புதுக்கோட்டை ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஜெகநாதன் உள்ளிட்ட பா.ஜ.க.வினர் 20 பேர் மீது செம்பட்டிவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.