மணிப்பூர் கலவரத்தை தடுக்ககோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
மணிப்பூர் கலவரத்தை தடுக்ககோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.;
பெரம்பூர்,
சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரே நேற்று அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அம்பேத்கர் கல்லூரி மாணவ- மாணவிகள் இணைந்து மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை கண்டுகொள்ளாத மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை தடுக்க வலியுறுத்தியும் பிரதமர் மோடிக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற(ஏ.ஐ.ஒய்.எப்.) மாவட்ட செயலாளர் சுரேஷ், அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம் (ஏ.ஐ.எஸ்.எப்.) மாவட்ட செயலாளர் வசந்த பாரதி ஆகியோர் தலைமையில் ஏ.ஐ.ஓய்.எப். மாநில தலைவர் வெங்கடேசன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி, அங்கிருந்த தபால் பெட்டியில் போட்டனர். வருகிற 2-ந்ேததி வரை தமிழகம் முழுவதும் மாணவர் அமைப்பினர் பிரதமர் மோடிக்கு இது தொடர்பாக 25 லட்சம் இ-மெயில் மற்றும் கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தனர்.