கலெக்டருக்கு 1000 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கலெக்டருக்கு 1000 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
திருப்பத்தூர் அருகே உள்ள ஆண்டியப்பனூரில் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் சாலையில் ஓடுவதால் சுகாதாரகேடு ஏற்படுவதாகவும், உடனே கழிவுநீர் கால்வாய் அமைக்க கோரியும், பஸ்நிலையத்தில் கழிப்பிடமும், நிழற்குடையும் அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட கலெக்டருக்கு 1000 அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
ஆண்டியப்பனூர் ஊராட்சி வளர்ச்சி சங்கத்தின் தலைவர் மார்கண்டன், செயலாளர் சேரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அஞ்சல் அட்டையில் கோரிக்கைகளை எழுதி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைத்தனர்.