வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்

மணக்கரம்பை எம்.ஜி.ஆர். நகரில் மழைநீர் வடிகால் வசதி கோரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது

Update: 2022-10-18 19:56 GMT

தஞ்சாவூர்;

தஞ்சை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கட்சியின் மாநகரக்குழு உறுப்பினர் ராஜன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் புனிதா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.போராட்டத்தில் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், மாநகர செயலாளர் வடிவேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி, அன்பு, ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.போராட்டத்தில், மணக்கரம்பை ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் சுமார் 300 வீடுகள் உள்ளன. இங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் வடிகால் ஏற்படுத்தி தர வேண்டும்.எம்.ஜி.ஆர். நகரில் பொது சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும். சமுதாயக்கூடம் அமைத்து தர வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்