நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம்:பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்பட 43 பேர் மீது வழக்கு

நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்ளிட்ட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-06-19 00:22 GMT


நீதிபதி வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பா.ஜ.க. மாவட்ட தலைவர் உள்ளிட்ட 43 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

தமிழக பா.ஜ.க. மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி. சூர்யா. இவர், மதுரை எம்.பி. வெங்கடேசனுக்கு எதிராக சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மதுரை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில், எஸ்.ஜி.சூர்யாவை போலீசார் கைது செய்து, ரேஸ்கோர்ஸ் காலனியில் உள்ள மதுரை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி ராம்சங்கரன் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரை வருகிற ஜூலை 1-ந் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

43 பேர் மீது வழக்கு

இதற்கிடையில் பா.ஜ.க. மாநில நிர்வாகி கைது செய்யப்பட்டு நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் தெரிந்ததும் அங்கு பா.ஜ.க.வினர் கூடி போராட்டம் நடத்தினார்கள். இது தொடர்பாக, தல்லாகுளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், மதுரை மாநகர் மாவட்ட பார்வையாளர் கார்த்திக்பிரபு உள்பட 43 பேர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்