குன்றத்தூர் கரைமா நகரில் அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தரவில்லை என்றால் போராட்டம் - எம்.எல்.ஏ. ஜெகன்மூர்த்தி

குன்றத்தூர் கரைமா நகரில் அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தரவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

Update: 2023-05-15 03:04 GMT

குன்றத்தூர் - பல்லாவரம் சாலை, கரைமா நகர் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளை கடந்த சில நாட்களாக அகற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது சாலையின் ஓரத்தில் உள்ள கடைகள் மற்றும் வீடுகள் அகற்றப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை கே.வி.குப்பம் எம்.எல்.ஏ.வும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான ஜெகன்மூர்த்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு தலை பட்சமாக செயல்படுவதாக தெரிவித்தார்.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட நபர்களுக்கு மாற்று இடம் எதுவும் கொடுக்கவில்லை என்றும் இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய இடம் கொடுக்கவில்லை என்றால் சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

அவருடன் கட்சி நிர்வாகிகள் குட்டின் என்ற ருசேந்திரகுமார், பரணி மாரி மற்றும் பலர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்