மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியத்தை உடனே வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் மாத ஊதியத்தை உடனே வழங்க வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்ராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சட்டக்கூலி ரூ. 11 ஆயிரத்து 848 வழங்க வேண்டும். அரசாணைப்படி தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ரூ.5 ஆயிரத்தை உடனே வழங்க வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு ஊதியத்தை நேரடியாக வங்கி மூலம் அவர்களது கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.