பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அரசாணையில் தெரிவித்துள்ளபடி மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 50-ம், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.10 ஆயிரத்து 36-ம் ஊதியமாக வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.10 ஆயிரம் ஊராட்சி மூலம் ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர், தூய்மைப் பணியாளர் மற்றும் 3 ஆண்டுகள் பணி முடித்த அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.