ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில், தேனி பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் அணி தலைவர் ராஜா, வர்த்தக அணி மாநில பொதுச் செயலாளர் ஜான் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் செங்கை ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மணிப்பூர் மாநில அரசை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.