தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-11 18:50 GMT

குடியாத்தம் சித்தூர்கேட் பகுதியில் வேலூர் மாவட்ட சிறுபான்மை நலக்குழு, வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மணிப்பூர், அரியானா மாநில கலவரத்தை தடுக்க தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும், அமைதியை நிலையாட்ட வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ சங்க செயலாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்க தாலுகா தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் தசரதன், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.சாமிநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

சி.ஐ.டி.யு. மாவட்ட துணைத் தலைவர் சி.சரவணன், விவசாய தொழிலாளர் சங்க தலைவர் பி.குணசேகரன், மாவட்ட சிறுபான்மை நலக்குழு செயலாளர் ஏ.கதிர்அகமது, துப்புரவு தொழிற்சங்க மாவட்ட துணைத் தலைவர் குபேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்