தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி போராட்டம்

தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர வலியுறுத்தி போராட்டம் நடந்தது.

Update: 2023-08-12 19:30 GMT

கர்நாடக மாநிலத்திடம் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் நீதி சோழன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். இதில் விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், துணைத்தலைவர் ராமன், நிர்வாகிகள் வரதராஜன், ஜெயக்குமார், தேவகி, பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் காவிரி நீரை பெற்றுத்தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கொள்ளிடம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒன்றிய செயலாளர் ஜெயசக்திவேல் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவராமன் கலந்து கொண்டு பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்