போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-30 18:46 GMT

ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே நடத்திட வேண்டும். தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் திருமாநிலையூரில் உள்ள ஈரோடு மண்டல போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு துணை பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணைச்செயலாளர் (ஓய்வு) சின்னசாமி, ஈரோடு மண்டல கிளை செயலாளர் குணசேகரன், கரூர் கிளை செயலாளர் (ஓய்வு) ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்