மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-24 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவத்தை கண்டித்தும், விஷச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாவட்ட செயலாளர் சேகர், விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில தலைமைக்குழு உறுப்பினர் அம்பேத்கர், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜூ ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் பழங்குடியின செயற்பாட்டாளர் அகத்தியன், மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அரசு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்