மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-01-06 18:45 GMT

கோத்தகிரி, 

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சியில் வேங்கை வயல் நீர்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மக்கள் அதிகாரம் மற்றும் முற்போக்கு மக்கள் மேடை அமைப்பின் சார்பில், கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் பூபதியூர் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்