ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-07-10 20:14 GMT


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க விருதுநகர் மாவட்டக்கிளையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகாயி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜானகி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அய்யம்மாள் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார்.

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முறையான சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, ஈமச்சடங்கு நிதி ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். சேமநல நிதி தொகையினை பிடித்தம் செய்த ரூ.10 ஆயிரத்துடன் தாமதமின்றி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட அமைப்பாளர் உலகநாதன் நிறைவுரையாற்றினார். சங்க மாவட்ட பொருளாளர் லட்சுமி நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்