தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம்

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-17 18:45 GMT

பல வருடங்களாக அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வகை மாற்றம் செய்து வழங்கிட வேண்டும், வீடு இன்றி வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு இலவச மனை, வீடு வழங்க வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட முதியோர் பென்சனை உடனடியாக வழங்க வேண்டும், பென்சன் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டூவிபுரத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயகம் மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் நடந்தது. போராட்டத்துக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநகர தலைவர் முத்துமாரி, மாதர் சங்க புறநகர தலைவர் ஹயர்நிஷா ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் பூமயில், மாநகரச் செயலாளர் காளியம்மாள், புறநகர செயலாளர் கண்ணகி, மாநகர பொருளாளர் வெங்கடேசுவரி, புறநகர் பொருளாளர் இசக்கியம்மாள், மாநில குழு உறுப்பினர் இனிதா, மாவட்ட குழு உறுப்பினர் ஜெயக்குமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்