இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-14 19:11 GMT

பெரம்பலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் மாணவரை சாதி பெயரை சொல்லி திட்டி, படிக்க விடாமல் செய்த பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னா் அவர்கள் இது தொடர்பாக மனுவினை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மஞ்சுளாவிடம் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்