அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அகில இந்திய ஓய்வூதியர் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதிவாணன், துணைத் தலைவர் அம்பிகாபதி, துணை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் பரிமளக்கண்ணன் வரவேற்று பேசினார். ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் பஞ்சபடியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீட்டு வசதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஓய்வூதிய சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், கதிரவன், குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.