அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-04-25 21:16 GMT

சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் திருச்சி மாவட்ட குழு சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரங்கராஜன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ராமசந்திரன், மாவட்ட துணை தலைவர்கள் அஜ்மல்கான், வின்சன்ட் உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்தி மொழியை அனுமதிக்க மாட்டோம் என்றும் முழக்கங்கள் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் இந்திய ஐகோர்ட்டுகளில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டால் தான் மக்களுக்கு சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகத்தின் மாண்புகளும் சரியான புரிதலோடு சேரும் எனவும், அப்போது தான் நீதித்துறையின் மீது முழுமையான நம்பிக்கை ஏற்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்