உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாகையில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-30 11:23 GMT

உணவு பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி நாகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் செல்வராசு எம்.பி. உள்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

சாலை மறியல்

பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மின்சார திருத்த மசோதா 2022-ஐ திரும்பப்பெற வேண்டும். அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவு பொருட்கள் மீது விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில், நாகை தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

250 பேர் கைது

போராட்டத்திற்கு நாகை செல்வராசு எம்.பி. தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

மறியலில் ஈடுபட்ட செல்வராசு எம்.பி. உள்பட 250 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அங்கு 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்