கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு -கிராம மக்கள் மனு

கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்;

Update: 2023-10-14 21:22 GMT

மேலூர், 

மேலூர் பகுதியில் இயங்கி வந்த 100-க்கும் மேற்பட்ட கிரானைட் குவாரிகளுக்கு கடந்த 2013-ம் ஆண்டு அரசு தடைவிதித்தது. கிரானைட் முறைகேடு தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் மேலூர் பகுதியில் சேக்கிபட்டியில் மற்றும் அய்யாபட்டி ஊராட்சியில் 3 கிரானைட் குவாரிகளுக்கு அரசு டெண்டர் விடப்படுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சேக்கிபட்டியில் ஒன்று கூடிய கிராம மக்கள் கிரானைட் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுத்தனர். ேமலும் மதுரை கலெக்டரிடம் மனு அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்