வேடசந்தூரில் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து போராட்டம்

வேடசந்தூரில் பொக்லைன் எந்திரம் முன்பு படுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2023-06-28 21:00 GMT

வேடசந்தூர் வீரணன் குளக்கரையோரத்தில், கடந்த 35 ஆண்டுகளாக மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருகின்றனர். இந்த குளக்கரையின் கடைசி பகுதியான எஸ்.ஏ.பி. நகரை சேர்ந்த ஒருவர், தனது நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இதற்கு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தாங்கள் குடியிருக்கும் வீட்டையும் இடித்து அப்புறப்படுத்த முயற்சி செய்வதாக கூறி, பொக்லைன் எந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, போக்குவரத்து தொழிற்சங்க நாகவேல் மற்றும் பெண்கள் பொக்லைன் எந்திரத்தின் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்