தேனியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் அ.தி.மு.க.வினர் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-05-29 21:00 GMT

தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தேனி பங்களாமேட்டில் தமிழக அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானத்தால் உயிரிழப்பு, கொலை, கொள்ளை சம்பவங்கள், போதைப்பொருட்கள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறியதாகவும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்புச் செயலாளர் ஜக்கையன் தலைமை தாங்கி பேசினார். முன்னாள் எம்.பி. பார்த்திபன், மாவட்ட துணைச்செயலாளர் சற்குணம், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் குறிஞ்சிமணி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச்செயலாளர் வக்கீல் தவமணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, அ.தி.மு.க.வினர் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மகளிரணியை சேர்ந்த நிர்வாகிகள், தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் மக்கள் பலியான சம்பவத்தை கண்டிக்கும் வகையில் தலையில் மண்பானைகளை சுமந்தபடி கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்