பரமத்திவேலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-08 18:45 GMT

பரமத்திவேலூர்:

ஜேடர்பாளையம் அருகே உள்ள கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் பட்டதாரி இளம்பெண் நித்யா (வயது 28) படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தியும், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பரமத்திவேலூர் காமராஜர் சிலை அருகே நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட குழு செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். வட்ட குழு உறுப்பினர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். செல்வராணி வரவேற்று பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கமணி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி, கிளை செயலாளர் சுந்தரமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்