தர்மபுரியில்தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Update: 2023-04-20 19:00 GMT

தர்மபுரி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. உள்ளாட்சி பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். உள்ளாட்சி பணியாளர் சம்மேளன மாநில தலைவர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட துணை செயலாளர் மாதேஸ்வரன், நிர்வாகிகள் சின்னசாமி, சுதர்சனன், சாமிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

அனைத்து உள்ளாட்சி, பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம ஊராட்சி பணியாளர்களுக்கு அரசாணையின்படி நாள் ஒன்றுக்கு ரூ.439-ம் பேரூராட்சி பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.480-ம் ஊதியமாக வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், டேங்க் ஆப்ரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம், பணிக்கொடை ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்