நாமக்கல்:
நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரியின் உபரிநீர் செல்லும் ஓடையில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் புறம்போக்கு பகுதியை அளந்து அத்து காட்ட பணம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் அதிகாரிகள் இதுவரை அளந்து அத்துகாட்டவில்லை என கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அ.பாலப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் புறம்போக்கு பகுதியை அளவீடு செய்யாத அதிகாரிகள் மீதும், ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.